

கரோனா தொற்று பரவலால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பிட சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு மூலம் உதவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு இணை இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம், நாமக்கல் மாவட்டங் களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கரோனா தொற்று பரவல் காரணமாக சொந்த ஊர் திரும்பும் நடவடிக்கையில் உள்ளனர். சொந்த ஊர் திரும்ப விருப்பம் உள்ளவர்கள் தொழிலாளர் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதற்காக சேலம் மாவட்டத்தில் சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, ஏற்காடு தாலுகா மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், பரமத்திவேலூர் தாலுகா எல்லைக்குள் பணியாற்றும் தொழிலாளர்கள், 9597386807 என்ற எண்ணில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தினகரனை தொடர்பு கொள்ளலாம்.
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி தாலுகா மற்றும் திருச்செங்கோடு, குமாரபாளையம் தாலுகா எல்லைக்குள் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சீனிவாசனை 82487 75883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஓமலூர், காடையாம்பட்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி தாலுகா எல்லையில் பணியாற்றும் புலம் பெயர் தொழிலாளர்களும், தருமபுரி (பொ) தொழிலக பாதுகாப்பு சுகாதார துணை இயக்குநர் சந்தோஷ் செல்போன் எண் 99942-26843 மூலம் தொடர்பு கொள்ளலாம். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பிட தேவையான உதவிகளை சேலம் தொழிலாளர் துறை மூலம் செய்து கொடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.