

தமிழக எல்லையில், கர்நாடக மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோயில் செயல் அலுவலர் ஜெய விபவசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கர்நாடக அரசு கடந்த 21-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. எனவே, மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு வழக்கமாக நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் தினமும் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.