

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ராம நவமி விழா நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு பூஜை, உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், பஞ்ச மகா ஆரத்தி, துளசி வந்தனம்,நரசிம்ம பூஜை ஆகியவை நடைபெற்றன.
கிருஷ்ணர், பலராமருக்கு ராமர்–லெட்சுமணர் போல் அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீராம தனுசு ஏந்தி அருள்பாலித்தனர். ராமருக்கு பச்சைப் பட்டு, லெட்சுமணருக்கு நீல நிறப் பட்டு சார்த்தப்பட்டிருந்தது.
ராம நாமம் அடங்கிய ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜபமும், பஜனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றது. சுவாமி தரிசனத்துக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில், கரோனா பாதுகாப்பு வரைமுறைகளுக்குட்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்கான் தென்தமிழக மண்டலச் செயலாளர் சங்கதாரி பிரபு சிறப்புரையாற்றினார். மேலும், ‘ஹரே கிருஷ்ண ஜபம்’’ என்ற பெயரில் பக்தர்கள் ஒன்றிணைந்து ஆன்லைன் மூலமாக மகாமந்திர தியானம் செய்யும் பயிற்சி தொடங்கப்பட்டது. தினசரி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் இந்த தியானப் பயிற்சியில் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க 7558148198 என்ற இஸ்கான் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, பெயரை மட்டும் அனுப்பினால் போதும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.