திருவண்ணாமலையில் - ஏல சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி : சகோதரர்கள் மீது எஸ்பியிடம் பெண் புகார்

திருவண்ணாமலையில் -  ஏல சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி :  சகோதரர்கள் மீது எஸ்பியிடம் பெண் புகார்
Updated on
1 min read

திருவண்ணாமலையில் ஏலச் சீட்டு நடத்தி 300 பேரிடம் ரூ.15 கோடி மோசடி செய்துள்ளதாக சகோதரர்கள் மீது திருவண்ணா மலை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அரவிந்திடம் புகார் அளிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கம் அடுத்த ஜப்தி காரியந்தல் கிராமத்தில் வசிக்கும் சிவா என்பவரின் மனைவி கவுதமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் நேற்று அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவில்  அண்ணாமலையார் சீட்ஸ் கம்பெனி மற்றும்  அண்ணாமலையார் தீபாவளி சீட்ஸ் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர்கள் தேவநாதன் மற்றும் கேசவராஜ். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்களிடம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், ரூ.2 லட்சம் சீட்டுக்கு பணம் செலுத்த தொடங்கினேன். 14 மாதங்கள் வரை ரூ.1.20 லட்சம் கட்டி யுள்ளேன்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி சீட்டு பணம் செலுத்த வந்தபோது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், என்னை போல் சீட்டு கட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, மார்ச் மாதத்துக்கு பணம் வசூல் செய்ய யாரும் வரவில்லை என தெரிவித்தனர்.

மிரட்டல்

அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றும் தேவநாதன் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் பணி யாற்றும் கேசவராஜ் ஆகியோர் சுமார் 300 பேரிடம், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என சீட்டு நடத்துவதாக கூறி ரூ.15 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளனர். அந்த பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து ஏமாற்றி வருகின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டு கொடுத்து, மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in