

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், கரோனா ‘நெகட்டிவ்’ என பயணிகளுக்கு போலி சான்றிதழ் வழங்கியவர் கைது செய்யப் பட்டார்.
பர்கூர் அடுத்த சத்தலப் பள்ளியைச் சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் பர்கூர்-திருப்பத்தூர் சாலையில் ரயில், விமானம், ஆம்னி பேருந்துகள் போன்றவற்றுக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மையம் நடத்தி வருகிறார். பயணிகளுக்கு கரோனா ‘நெகட்டிவ்’ என்ற சான்றிதழை இவரே போலியாக தயாரித்து அரசு மருத்துவர் கையெழுத்து, முத்திரை போன்றவற்றையும் இடம்பெறச் செய்து வழங்கி வந்துள்ளார். பர்கூர் சுற்று வட்டாரங்களில் கிரானைட் நிறுவனங்கள் மற்றும் குவாரிகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக அளவில் இவ்வாறு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் கலையரசி பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் தினேஷை கைது செய்தனர்.