

தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பனாமா நாட்டிலிருந்து இலங்கை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த 'எக்ஸ்பிரஸ் கோட்டபாக்ஸி ' என்ற கப்பலில் வந்த சரக்கு பெட்டகங்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை செய்தனர்.
ஒரு சரக்கு பெட்டகத்தில் சிறிய மரத்தடிகளுக்கு இடையே கோக்கைன் என்ற போதைப் பொருள் 28 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 300 கிலோ போதைப்பொருள் அதில் இருந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 1500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், அதனை கடத்தி வந்தவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.