Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன :

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்துடன் மாலை 5 மணி முதல், காலை 5 மணி வரை கடற்கரைச் சாலை மூடப்படுகிறது. ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி மாலை 6 மணியளவில் வெறிச்சோடி கிடக்கிறது புதுச்சேரி கடற்கரை சாலை. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் கரோனா பரவல்அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடு கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. கடற்கரை சாலை மாலை5 மணிக்கு மூடப்பட்டது. நடை பயிற்சிக்காக வந்தோரையும், சுற்றிபார்க்க வந்த இளையோரை யும் போலீஸார் திருப்பி அனுப்பினர். வெப்பத்தின் தாக்கத்தால் தவித்த பலரும் மாலையில் கடற்கரையில் அமர வாய்ப் பில்லாமல் புறப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நடைப் பயிற்சிக்காக வந்தோர் அருகே யுள்ள சாலைகள், பாரதி பூங் காவில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். கடற்கரை சாலை மூடப் பட்டதால் பாரதி பூங்காவில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

அதேபோல் ஹோட்டலில் இரவு8 மணி வரை மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். பிறகு பார் சல் வாங்கி சென்றனர். ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் காலை 5 வரை அமலுக்கு வந்தது.

இரவு 8 மணிக்கு பார்கள் மூடல்

இதற்கிடையே, புதுவையில் மதுபான பார்களுடன் கூடிய ஓட்டல்கள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். சில்லறை மதுபான விற்பனை கடைகள், சாராயம் மற்றும் கள் கடைகள் இரவு 10 மணி வரை இயங்கலாம். இந்த உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது புதுவை கலால் சட்டம் 1970 படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x