

கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரசாந்த் (37). இவர், நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அப்பகுதியில் இருந்த கடையில் டீ குடித்துள்ளார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வதை பிரசாந்த் பார்த்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் அவர், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த திருமால் (எ) இன்பரசன் (34) என தெரிய வந்தது. இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.