Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் - டாஸ்மாக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு :

மகாவீரர் ஜெயந்தி நாளான வரும் 25-ம் தேதி மற்றும் உழைப்பாளர் தினமான வரும் மே 1-ம் தேதியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை மூட தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிஉத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதியின் கீழ் மகாவீரர் ஜெயந்தி நாளான வரும் 25-ம் தேதி மற்றும் உழைப்பாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, தி.மலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். மேலும், மதுக்கூடங்கள், எப்எல்-1, எப்எல்-2,எப்எல்-3, எப்எல்-3ஏ, எப்எல்-3ஏஏ மற்றும் எப்எல்-11 உரிமம் பெற்ற உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள் மற்றும் எப்எல்4-ஏ உட்பட அனைத்து மதுபானக் கூடங்கள் மற்றும் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யாமல் மூடி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்,

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், அதையொட்டியுள்ள பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தியான வரும் 25-ம் தேதி அன்றும் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி அன்றும் மூடி வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட நாட்களில் மதுபாட்டில் விற்பனை நடைபெற்றால் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x