

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள கோணப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் நேற்று தனது காரில் முசிறிக்குச் சென்றார். அங்குள்ள மின் அலுவலகம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த சுந்தரமூர்த்தி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்குவதற்குள் கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்குவந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து முசிறி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.