

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 289 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 137 பேரும், மாவட்டத்தின் பிற இடங்களில் அதிகபட்சமாக ஓமலூரில் 20 பேர், வீரபாண்டியில் 16 பேர், ஆத்தூரில் 15 பேர், தாரமங்கலத்தில் 13 பேர், காடையாம்பட்டியில் 11 பேர், எடப்பாடியில் 8 பேர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, சங்ககிரியில் தலா 7 பேர், நங்கவள்ளியில் 6 பேர், கெங்கவல்லியில் 5 பேர் பாதிக்கப்பட்டனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர் கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். நேற்று 149 பேர் தொற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர்.
இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,452 ஆக உயர்ந்துள்ளது.