புவனகிரி அருகே  -  11 பவுன் நகை, பணம் கொள்ளை :

புவனகிரி அருகே - 11 பவுன் நகை, பணம் கொள்ளை :

Published on

புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. விவசாயி. இவரது மனைவி பூங்கோதை. இவர்க ளுக்கு அதே பகுதியில் 2 வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வீரமுத்து ஒரு வீட்டை பூட்டிவிட்டு மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். நேற்று காலை பூங்கோதை பூட்டியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப் போது அந்த வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு அறையில இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்த 11 பவுன் நகை, ரூ. 7 ஆயிரம் கொள்ளை யடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து புவனகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in