Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

மதுரை-சென்னை எழும்பூர் - அதிவிரைவு சிறப்பு ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் :

மதுரை

மதுரை-சென்னை எழும்பூர் வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயிலில் நவீன எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை-சென்னை எழும்பூர் (வண்டி எண் 06158) வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து ஏப்.17 (நேற்று) முதல் மறு அறிவிப்பு வரும் வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்னை சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் (வண்டி எண் 06157) சென்னை எழும்பூர்-மதுரை வாரம் இருமுறை அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஏப்.18 (இன்று) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.10 மணிக்கு மதுரை வந்தடையும்.

இந்த ரயில்களில் இதுவரை பெரம்பூர் ஐசிஎப் பெட்டிகள் இணைக்கப்பட்டு வந்தன. நேற்று முதல் இந்த ரயில்களில் நவீன எல்எச்பி (LHB) பெட்டிகள் இணை க்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப் புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x