

நடிகர் விவேக் மறைவையொட்டி, திருச்சி செந்தண்ணீர்புரம் கம்பர் தெருவில் மக்கள் சக்தி இயக் கம், தண்ணீர் அமைப்பின் சார்பில் நேற்று இரங்கல் கூட்டம் நடை பெற்றது.
இதில் மக்கள் சக்தி இயக்கத் தின் மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பின் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விவேக் உருவப் படத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் விவேக் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.
அப்போது, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் விருப் பத்தை நிறைவேற்றும் வகையில், நடிகர் விவேக், தமிழகத்தில் 1 கோடி மரங்கள் வளர்க்கும் ‘பசுமை கலாம்’ திட்டத்தை கடந்த 2011-ல் திருச்சியில் தொடங்கி னார். அதன்பின் படிப்படியாக தற்போதுவரை சுமார் 33 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
எனவே, நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கிட, ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, திருச்சி மேலரண் சாலையிலுள்ள நாடகக் கலைஞர்கள் சங்க அலுவ லகத்தில், நடிகர் விவேக்கின் உருவப் படத்துக்கு சங்கத் தலைவர் காத்தான், செயலாளர் எம்.எஸ்.முகமது மஸ்தான், பொருளாளர் கண்ணன், துணை செயலாளர் கணேசன், நிர்வாகிகள் பாட்சா, இளங்கோ உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.