

திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார்(23). ரவுடியான இவர் நேற்று முன்தினம் காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள ஒரு டீ கடைக்கு அருகில் நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காந்தி மார்க்கெட் போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் போலீஸார் அங்குசென்று சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.050 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல எடமலைப்பட்டிபு தூர் மதுரை பிரதான சாலை பகுதி யைச் சேர்ந்த விஜயன் மகன் சந்திரமவுலி(36). ரவுடியான இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் அப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக அளிக் கப்பட்ட புகாரின்பேரில் எடமலைப் பட்டி புதூர் போலீஸார் சந்திர மவுலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.