

திருச்சி பொன்மலை நார்த் டி பகுதியிலுள்ள சுரங்கப்பாதைக் கும், மஞ்சத்திடல் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள தண்டவாளம் அருகே இளைஞர் ஒருவர் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸாரும், பொன்மலை போலீஸாரும் அங்குசென்று விசாரணை மேற் கொண்டனர். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர், கொலை செய்யப் பட்டாரா அல்லது ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.