

சேலம் அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார்.
சேலம் ஆட்டையாம்பட்டி சென்னகிரி தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கோகுல்ராஜ் (23). இவர் சேலத்தில் உள்ள கார் பட்டறையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது.
கோகுல்ராஜ் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் மல்லூர் பாலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தின் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கோகுல்ராஜ் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.