

சிதம்பரத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலை வர் ரவிச்சந்திரன் தலைமை தாங் கினார்.
மாவட்ட செயலாளர் மாதவன்,பொருளாளர் தட்சிணா மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் கற்பனைசெல்வம், ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அரசு யூரியா, காம்ப்ளக்ஸ்,பொட்டாஷ் உரங் களின் விலையை உயர்த்தி உள்ளது. உரத்திற்கான மானியங் களை குறைத்துள்ளது.
உர விலை உயர்வை கண்டித்து அனைத்து ஒன்றியங்களிலும் நாளை (ஏப்.15) மற்றும் நாளை மறுநாள்(ஏப்.16) ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங் களை உடனே திறக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் தேர்தல் முடிந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தடையின்றி மும்முனை மின் சாரத்தை வழங்க மின்வாரியம்
நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி யில் உளுந்து, பச்சை பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
இதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.