

கரூர் அருகேயுள்ள முத்துசோளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மல்லிகா(50). இவர்களது வீட்டுக்கு சுப்பிரமணியனின் அக்கா பேத்தி வர்ஷினி(10) அண்மையில் வந்திருந்தார்.
இந்நிலையில், வர்ஷினிக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு மல்லிகா அவரை நேற்று அழைத்துச் சென்றார்.
அப்போது, வர்ஷினி உடலில் கயிற்றை கட்டி மல்லிகா கிணற்று மேல் நின்று நீச்சல் பயிற்சி அளித்துள்ளார்.
அப்போது கயிற்றில் இருந்த முடிச்சு அவிழ்ந்துவிட்டதால் வர் ஷினி கிணற்றில் மூழ்கியுள்ளார். இத னால் அதிர்ச்சியடைந்த மல்லிகா, வர்ஷினியை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார்.
பயத்தின் காரணமாக மல்லிகாவை வர்ஷினி இறுக்கமாக கட்டிக்கொள்ளவே, இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.