முகக்கவசம் அணியாத 591 பேருக்கு அபராதம் :

முகக்கவசம் அணியாத 591 பேருக்கு அபராதம்  :
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமானதைத் தொடர்ந்து பொது இடங்களுக்கு முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 31 பேரிடம் இருந்து சுகாதாரத் துறையினர் ரூ.6,200 அபராதம் வசூலித்தனர். இதேபோல், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 498 பேரிடம் இருந்து ரூ.99 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி 34 பேரிடம் இருந்து 6,800 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

மேலும், ஒரு கடையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 27 பேரிடம் இருந்து 5,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் 591 பேரிடம் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in