சக்தி மசாலா பணியாளர்களுக்கு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் :

ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடந்தது.  இதனை, சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பிசி துரைசாமி  சாந்தி துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடந்தது. இதனை, சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பிசி துரைசாமி சாந்தி துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Updated on
1 min read

சக்தி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடந்தது.

சக்தி மசாலா நிறுவனம் தங்களது பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவும், ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தலின் பேரிலும், சக்தி தேவி அறக்கட்டளை வளாகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

சக்தி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் பி.சி.துரைசாமி, இயக்குநர் சாந்தி துரைசாமி ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர். இம்முகாமில் சக்தி மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் 327 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிகழ்வில் கரோனா இரண்டாவது அலை குறித்து வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி விளக்கமளித்தார். மருத்துவ அலுவலர் சூர்யபிரபா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சக்திதேவி அறக்கட்டளையின் பணியாளர்கள் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சக்தி மசாலா நிர்வாகிகள் சாந்தி துரைசாமி, செந்தில்குமார், தீபா செந்தில்குமார், வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந் தனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in