

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2007 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 119 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் 91 பேரும், இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிறமாவட்ட மருத்துவமனைகளில் 38 பேரும், அரசு மருத்துவமனையில் 55 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 373 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2007பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் கரோனா தடுப்பூசியை நேற்று 3070 பேருக்கு செலுத்தப்பட்டது.
இதுவரை 99 ஆயிரத்து 695 பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.