கிருஷ்ணகிரி அணையில் இருந்து மேலும் 10 நாள் தண்ணீர் திறக்க கோரிக்கை :

கிருஷ்ணகிரி அணையில் இருந்து  மேலும் 10 நாள் தண்ணீர் திறக்க கோரிக்கை :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, கூடுதலாக 10 நாள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் அளித்துள்ள கோரிக்கை மனு:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, இடது மற்றும் வலது புறகால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக் கபட்டு, நேற்றுடன் நிறைவடைகிறது.

இதனால் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்த வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2-ம் போக நெல் சாகுபடி முழுமையாக முடிய இன்னும் 12 நாள் தண்ணீர் தேவைப்படுகிறது.

அப்போது நெற்கதிர்கள் முழுமை யாக அறுவடை செய்ய முடியும். ஆகவே, மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in