

மத்திய மண்டலத்தில் நேற்று 604 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 1,281 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் நேற்று உயிரிழந்தனர். 103 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,360 ஆக உள்ளது.
இதேபோல, அரியலூரில் 22 பேரும், கரூரில் 44 பேரும், நாகப்பட்டினத்தில் 125 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், தஞ்சாவூரில் 127 பேரும், திருவாரூரில் 98 பேரும் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் சிகிச்சையில் இருந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர்.