திண்டுக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 548 வழக்குகளுக்கு தீர்வு :

திண்டுக்கல் மக்கள்  நீதிமன்றத்தில் 548 வழக்குகளுக்கு தீர்வு :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில்

548 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமையில் நடைபெற்றது. மக்கள் நீதிமன்ற தலைவர் ஜி.புவனேஷ்வரி முன்னிலை வகித்தார்.

மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் சார்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ஆர்.செல்வக்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர், சார்பு நீதிபதி ஆர்.பாரதிராஜா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.ஆனந்தவள்ளி, குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் எம்.முருகன், சி.பி.முல்லைவாணன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 526 வழக்குகளுக்கும், வழக்கு தாக்கலாவதற்கு முன்னர் உள்ள 22 வழக்குகளிலும் மக்கள் நீதிமன்றத்தில் முடிவு காணப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் மொத்தம் ரூ.4,53,13,129 தீர்வு காணப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in