தலைவாசலில் நகைக்கடையை உடைத்து 2.75 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு : லாக்கரை உடைக்க முடியாததால் 40 பவுன் நகைகள் தப்பின

தலைவாசலில் நகைக்கடையை உடைத்து  2.75 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு :  லாக்கரை உடைக்க முடியாததால் 40 பவுன் நகைகள் தப்பின
Updated on
1 min read

ஆத்தூரை அடுத்த தலைவாசலில், நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 2 கிலோ 750 கிராம் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால், 40 பவுன் தங்க நகைகள் தப்பின.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (34). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் மும்முடி பகுதியில், கடந்த ஆண்டு நகைக் கடை திறந்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்துராஜ், வழக்கம் போல நகைக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், நேற்றுகாலை நகைக்கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு கடை திறந்து இருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தலைவாசல் காவல் நிலையத்துக்கும், முத்துராஜூவுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, ஆத்தூர் டிஎஸ்பிஇம்மானுவேல் ஞானசேகரன், இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீஸார், நகைக்கடையை ஆய்வு செய்தனர். அதில், வெள்ளித்தட்டுகள், காமாட்சி விளக்குகள், சந்தனக்கிண்ணம் உள்ளிட்ட 2 கிலோ 750 கிராம்வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், ‘கடையின் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த லாக்கரில் சுமார் 40 பவுன் நகைகள் இருந்துள்ளன. மர்ம நபர்களால், லாக்கரை உடைக்க முடியாததால், அதில் இருந்த நகைகள் தப்பின. நகைக் கடைக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் உள்ள நகைக்கடையில் திருட்டு நடந்துள்ளது’ என்றனர். இதனிடையே, கைரேகை நிபுணர்கள் நகைக்கடையில் ஆய்வு செய்தனர். மோப்பநோய் கொண்டும் போலீஸார் சோதனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in