

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா, லாட்டரி, மது விற்பனை செய்வோர் மீதும், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையின்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேர், கஞ்சா விற் பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் தெரி வித்துள்ளது: சட்டவிரோதமாக லாட்டரி, கஞ்சா, மது விற்பனை, மணல் திருட்டு, சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல் களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்ந்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார்.