

புதிய வேளாண் சட்டங்களை நீக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என தமிழக உழவர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழக உழவர் இயக்கத்தின் தொடக்கக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக உழவர் இயக்கத்தின் தலைவராக கோ.திருநாவுக்கரசு தேர்வு செய்யப்பட்டார்.
மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் க.பாலகிருஷ்ணன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங் கிணைப்பாளர் சு.பழனிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் அருண்ஷோரி ஆகியோர் வாழ்த் திப் பேசினர்.
கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை நீக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர் வைக் கூட்ட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையையும், அரசாங்க கொள்முத லையும் சட்டரீதியான உரிமை யாக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
விவசாயத்துக்கு டீசல் விலை யில் 50 சதவீதம் மானியம் அளிக்க வேண்டும். மின்சாரச் சட்டம் 2020, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் 2020 ரத்து செய்யப்பட வேண்டும். மாநிலத்துக்கான துறைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தில் போராடிவரும் விவசாய அமைப்பு களின் நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலாளர் ராவணன் நன்றி கூறினார்.