கடலூர் மாவட்டத்தில் - கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை : வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டத்தில் -  கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை :  வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை
Updated on
1 min read

கடலூர் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) ரமேஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 6,108 மெட்ரிக் டன் யூரியா, 1,076 மெட்ரிக் டன் டிஏபி, 2,119 மெட்ரிக் டன் பொட்டாஷ், 964 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 4,692 மெட்ரிக்டன் காம்ப்லெக்ஸ் உரங் கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2020-21-ம் ஆண்டு விலை யிலேயே தற்போதும் டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்லெக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரி வித்துள்ளது. இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங் கிய தகவல் பலகை பராமரிக்க வேண்டும்.

உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் உரம் வாங்கும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in