Regional01
இருசக்கர வாகனம் திருடியவர் கைது :
தென்காசி மாவட்டம், புளியங்குடி, டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், தனது வீட்டின் அருகில் இருக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். அதை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.
