முகக்கவசம் அணியாததால் -  விழுப்புரத்தில் 23 பேருக்கு அபராதம் :

முகக்கவசம் அணியாததால் - விழுப்புரத்தில் 23 பேருக்கு அபராதம் :

Published on

விழுப்புரத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற 23 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பழையபடி மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும் சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் நகரில் நகராட்சி நிர்வாகம், காவல்துறை இணைந்து முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் முகக்கவசம் அணியாமல் சென்ற 23 பேருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும். சமூக இடைவெளி யையும் பின்பற்ற வேண்டும். இதுசம்பந்தமாக அவ்வப்போது ஒலிப்பெருக்கியிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்று நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in