

சேலத்தல் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் ராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் குறிச்சி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் கார்த்திகேயன் (40) ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சக்தி. இவர்களுக்கு நித்யபிரியா (10), மவுலீஸ் (7) என்ற குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் விடுப்பில் சேலம் வந்துள்ளார். நேற்று முன்தினம் (8-ம் தேதி) அவரது சகோதரர் மணிமாறனுடன் (41) அரியானூரில் உள்ள ராணுவ கேன்டீனுக்கு சென்று, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.
சேலம் சன்னியாசிகுண்டு பை-பாஸ் சாலையில் சென்றபோது, பரமத்திவேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு கோரைப்பாய் ஏற்றிச் சென்ற லாரி மோதியது. இதில் ராணுவ வீரர் கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து