நலவாரிய ஓய்வூதிய ஆயுள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் : தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

நலவாரிய ஓய்வூதிய ஆயுள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும் :  தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
Updated on
1 min read

நல வாரியங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழி லாளர்கள் நல வாரியம் மற்றும் 15 தொழிலாளர்கள் நல வாரி யங்களில் பதிவு செய்து, திருவண் ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய் வூதியதாரர்கள், 2021-2022-ம் ஆண்டுக்கான தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அளவு புகைப் படம், ஆதார் அட்டை நகல் மற்றும் பதிவு பெற்ற மத்திய- மாநில அரசு அதிகாரியின் ஆயுள்சான்று பெற்று வரும் 30-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். திருவண்ணாமலை காந்தி நகர் 8-வது தெரு, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உடலுழைப்பு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள ஓய்வூதியதாரர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினராக இருந்தால் அதற் கான சான்றிதழ் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in