Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத கடைகள் மூடப்படும் : கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன். அருகில் துணை ஆணையர் மதுராந்தகி, நகர் நல அலுவலர் ராஜா. படம்:ஜெ.மனோகரன்

கோவை

கரோனா முன்தடுப்பு வழிமுறை களை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களை ஒரு வார காலத்துக்கு மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களி டம் நேற்று அவர் கூறியதாவது:

மாநகரில் நாளொன்றுக்கு 180 முதல் 220 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் கடைகள், நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களின் கைகளை சானிடைசர் மூலமாக சுத்தம் செய்தல், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பார்த்தல், உடல் வெப்பநிலையை பரிசோ தித்தல் ஆகிய முன்தடுப்பு பணி களை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒரு வார காலத்துக்கு அந்த நிறுவ னத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து நிறுவனங்களும் இதனைக் கடைபிடிக்க வேண்டும். கடைகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள், தொழிற்சாலைகள், திரையரங்குகள், மருத்துவமனைகள் இதில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்.

பள்ளிகளில் ஆன்லைன் முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. விதிகளை மீறி பள்ளிகள் செயல்பட்டால், அபராதம் மற்றும் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கும் முன், பொதுமக்களே தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். வெயில் காலமாக உள்ளதால் மூத்த குடிமக்கள் வெளியில் அதிகம் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவ பிரிவு மூலமாக கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, தேவையான இடங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படும் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் விரைவில் கபசுர குடிநீர் வழங்கப்படவுள்ளது.

மாநகராட்சி பகுதியில் தற்போது நாளொன்றுக்கு 2500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசின் கட்டமைப்புகள் மூலமாகவும், விரும்பினால் தனியார் மூலமாகவும் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். பணியாளர்கள் தட்டுப்பாடு இல்லை. தேவைப் பட்டால் செவிலியர் கல்வி நிறுவனங்களில் இருந்து பரிசோதனைப் பணிக்கு செவிலியர் படிப்பு மாணவர்களை அழைத்துக் கொள்வோம்.

மக்களுக்கு கரோனா அறிகுறிகள் குறித்து தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்ட நிலையில், வீடுகள்தோறும் சென்று பரிசோதனை செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தடுப்பூசிகள் போதுமான அளவில் உள்ளது. கரோனா பாதித்தவர்களை அழைத்து செல்ல, வர கூடுதல் வாகனங்கள் பயன்படுத்தப் படும்.

பயணங்களை தவிர்க்க வேண்டும்

மாநகரில் உருமாறிய கரோனா பாதிப்பு இதுவரை இல்லை. தற்போது கரோனா தொற்றுக்கு உள்ளாவோர், பயணங்கள் மூலமாகவே பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் இதை கவனத்தில் கொண்டு, தேவையில்லாத வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியூர் பயணம் சென்றால், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கைகளை தவிர்ப்பதே நல்லது. வரும் நாட்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x