Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

புதுச்சேரி பாஜக தலைவருக்கு கரோனா :

புதுச்சேரி

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து வாக்குப்பதிவுமுடிவடைந்த சூழலில் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரைப்பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதி யானது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கெனவே மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x