

அவர் கூறியதாவது: தொழிற்சாலைகள், தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். முகக் கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசு பரிந்துரைப்படி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 வாரங்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் முகாம்களை நடத்தி அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.