Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

தேசிய தொழில்நுட்ப கற்றல் அமைப்பு தேர்வில் - சதக்கத்துல்லா அப்பா கல்லூரி சிறப்பிடம் :

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் கல்வியமைச்சகத்தின் சார்பில் நாடெங்கிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெற, இணைய வழியில் கற்றலுக்கான என்பிடிஇஎல் (NPTEL) எனும் தேசியத் தொழில் நுட்பக் கற்றல் அமைப்பு (National Programme on Technology) தொடங்கப்பட்டு லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

ஸ்வயம் என்பிடிஇஎல் (SWAYAM NPTEL) கிளை அமைப்பினை (Local Chapter) சதக்கத்துல்லா அப்பா கல்லூரி யில் தொடங்க மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவ்வ மைப்பு 26.07.2018-ல் அன்று தொடங்கப்பட்டது.

வகுப்பறை சார்ந்த கற்றலுக்கு இணையாக, இணையம் சார்ந்த கற்றல் எனும் முறையிலமைந்த என்பிடிஇ.எல் மின் பாடத்திட்டங்களை 7ஐ.ஐ.டி நிறுவனங்களும் (Indian Institute of Technology) இந்திய அறிவியல் நிறுவனமும் (Indian Institute of Science) இணைந்து தயாரித்து வழங்குகிறது.

கரோனா நோயால் நாடு முழுக்க பாதிப்பு ஏற்பட்டு பொது முடக்கம் அனுசரிக்கப்பட்ட காலத்திலும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி என்பிடிஇஎல் கிளையானது சிறப்பாக செயல்பட்டு, 2020 -ம் ஆண்டுக்கான தர மதிப்பீட்டில் அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 6-ம் இடத்தை பெற்றுச் சிறந்த எம்பிடிஇஎல் கிளையாக தேர்வு செய்யப்பட்டு ‘ஏ எனும் உயர் மதிப்பீடு (கிரேட்) மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

84 மாணவ, மாணவிகளுக்கு சில்வர் கிரேடும், 4 மாணவ, மாணவிகளுக்கு கோல்ட் கிரேடும் அளிக்கப்பட்டது. என்பிடிஇஎல் இணையவழித் தேர்வுகள் எழுத மாணவர்களைச் சிறப்பாக நெறிப்படுத்தித் தேசிய அளவில் வெற்றி பெற வைத்தமைக்காக அந்தந்த துறைசார்ந்த 17 என்பிடிஇஎல் நெறியாளர்களுக்கு சிறந்த தேசிய நெறியாளர் சான்றிதழ்கள் மத்திய கல்வியமைச்சகத்தால் தரப்பட்டது என்று தெரிவித்தார்.

துணை முதல்வர் செய்யது முஹம்மது காஜா, கலைப்புல முதன்மையர் ச. மகாதேவன், டிஜிடல் லேர்னிங் சென்டர் (மின்வழிக் கற்றல்) புல முதன்மையர் ஷாஜுன் நிஷா, ஒருங்கிணைப்பாளர்கள் முஹம் மது ஹனீப், அபுசாலி ஷேக் ஆகியோர் உடனிருந்தனர்.

இணையம் சார்ந்த கற்றல் முறையிலமைந்த என்பிடிஇ.எல் மின் பாடத்திட்டங்களை 7ஐ.ஐ.டி நிறுவனங்களும் இந்திய அறிவியல் நிறுவனமும் இணைந்து தயாரித்து வழங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x