Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கிராமப்புறங்களில் அதிகரித்த வாக்குப்பதிவு சதவீதம் : மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவந்தானில் 79.47% பதிவானது

மதுரை மாவட்டத்தில் நகர் பகுதியைவிட, கிராமங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக சோழ வந்தான் தொகுதியில் 79.47 சதவீதம் பதிவானது.

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழ வந்தான், மேலூர் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 26,97,682 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் மதுரை நகர் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு சதவீ தம் அதிகரிக்கவில்லை. நகரிலுள்ள 4 தொகுதிகளைவிட, கிராமங்களை உள்ளடக்கிய பிற 6 தொகுதிக ளிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது. இதன்படி, மதுரை வடக்கு தொகுதியிலுள்ள 2,43,424 வாக்காளர்களில் 63.58 சதவீதம் பேரும், தெற்கு தொகுதியில் இடம்பெற்றுள்ள 2,30,053 பேரில் 63.78 சதவீதம் பேரும், மதுரை மத்தியிலுள்ள 2,41,796 பேரில் 61.21 சதவீதம் பேரும்,மேற்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 3,06,952 பேரில் 65.15 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியிலுள்ள 2,18,106 வாக் காளர்களில் 79.47 சதவீதம் பேரும், திருமங்கலத்திலுள்ள 2,77,803 வாக்காளர்களில் 78.11 சதவீதம் பேரும், மேலூர் தொகுதி யிலுள்ள 2,44,778 வாக்காளர்களில் 74.23 சதவீதம் பேரும், மதுரை கிழக்கு தொகுதியிலுள்ள 3,28,990 வாக்காளர்களில் 71.32 சதவீதம் பேரும், திருப்பரங்குன்றம் தொகுதி யிலுள்ள 3,21,195 வாக்காளர்களில் 72.74 சதவீதம் பேரும், உசில ம்பட்டியிலுள்ள 2,84,585 வாக் காளர்களில் 73.71 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

10 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சதவீத அடிப்படையில் சோழவந்தான் முதலிடத்திலும், திருமங்கலம் 2-வது இடத்திலும், மேலூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மதுரை மாவட்டத்தில் நகர் பகுதி யிலுள்ள தொகுதிகளைவிட, கிராமப் புறங்களை உள்ளடக்கிய 6 தொகுதிகளில் பெண்கள், இளை ஞர்கள், பெருமளவில் திரண்டு வாக்களித்து இருக்கின்றனர் என்பது தெரிகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இம் முறை வாக்களிக்கும் நேரத்தை தேர்தல் ஆணையம் அதிகரித்தி ருந்தபோதிலும், மதுரை நகர் பகுதிகளில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தைக்கூட எட்டவில்லை.

இதுகுறித்து அதிாரிகளிடம் கேட்டபோது, பகலில் கடும் வெயில் நிலவியதால் வரிசையில் நின்று காத்திருக்க விரும்பாமல் நகர் பகுதி வாக் காளர்கள் இருந்திருக்கலாம். ஒருசிலர் கரோனா பரவிவிடும் என்ற பயம் காரணமாகவும் வராமல் இருந்திருக்கலாம் என்று தெரி வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x