Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கான - வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு : 24 மணி நேரமும் கண்காணிக்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்

மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6-ம் தேதி பதிவான வாக் குகள் அடங்கிய இயந்திரங்கள் ஒவ்வொரு பூத்திலும் கட்சியின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, லாரிகள் மூலம் வாக்குகள் எண்ணிக்கை மையங் களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொலைதூரப் பகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாலை வரை எடுத்து வரப்பட்டன.

மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தியத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரிக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குப்பதிவு இயந் திரங்கள் தமிழ்நாடு பாலி டெக்னிக்குக்கும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் தனக்கன்குளத் திலுள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டிடத்துக்கும், மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் ஒத்தக்கடை அருகிலுள்ள வேளாண் கல்லூரிக்கும் எடுத்துச் செல் லப்பட்டு ‘சீல்' வைக்கப்பட்டன.

ஒவ்வொரு மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்' வைக்கப்பட்ட அறையில் (ஸ்ட்ராங் ரூம்) துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், இதற்கு அடுத்த நிலையில் ஆயுதப்படை, பட்டாலியன் போலீஸாரும், முகப்பு மற்றும் வெளிப்பகுதியில் உள்ளூர் போலீஸார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள்பகுதி, சுற்றுப்புறங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. வாக்குகள் எண் ணுவதற்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் 24 மணி நேரமும் 3 சுழற்சி முறையில் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல் லூரியில் தலா ஒரு உதவி காவல் ஆணையர் தலைமையில் 2 ஆய்வாளர்கள், எஸ்.ஐ.கள் என ஒவ்வொரு சுற்றுக்கும் 100-க்கும் மேற்பட்டோரும், அண்ணா பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரியில் டிஎஸ்பி தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், எஸ்ஐ-கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் அடங்கிய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரி மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல் துணை ஆணையர் சிவபிரசாத் ஆய்வு செய்தார். வேளாண் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் எஸ்பி சுஜித் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

ஒவ்வொரு மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்டுள்ள அறையை வீடியோ மூலம் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்க்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒவ்வொரு மையத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x