Published : 08 Apr 2021 03:13 am

Updated : 08 Apr 2021 03:13 am

 

Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

வாடிப்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் மரணம் :

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தலை சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை வாடிப்பட்டி போலீஸார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இறந்தவர் வெள்ளை நிறச்சட்டை, அதிமுக கரை வேட்டி அணிந்திருந்தார். அதிமுக பிரமுகராக இருக்கலாம் என கருதும் போலீஸார் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x