ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி தண்டலர் கைது  :

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வரி தண்டலர் கைது :

Published on

பெரம்பலூர் நகராட்சியில் வரி தண்டலராக பணியாற்றி வருபவர் அப்பு என்கிற அப்லோஸ்(47). பெரம்பலூர் ரோஸ் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் அண்மையில் புதிதாக கட்டிய வீட்டுக்கு நகராட்சி வரி விதிக்க, அப்லோஸ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசன் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்பேரில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அப்லோஸிடம் ரசாயனப் பவுடர் தடவிய ரூ.15 ஆயிரம் பணத்தை வெங்கடேசன் நேற்று மாலை கொடுத்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் ரத்னவள்ளி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், அப்லோஸை கைது செய்து, லஞ்சமாக பெற்ற பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், நகராட்சி அலுவலகம், அப்லோஸ் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in