

தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி யூ.எஸ்.பி. கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனித்தனி கட்டிடங்களில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் சமீரன், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள் அறைகளை பூட்டி சீல் வைத்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் உடனிருந்தனர்.