Published : 07 Apr 2021 03:16 am

Updated : 07 Apr 2021 03:16 am

 

Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட - செல்வபுரம் வாக்குச்சாவடியில் அதிமுக, திமுகவினர் தள்ளுமுள்ளு : இருதரப்பினரும் பரஸ்பரம் புகார்

கோவை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, செல்வபுரம் பகுதியில் உள்ள 127, 127ஏ ஆகிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக, கார்த்திகேய சிவசேனாபதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில், “வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வெளியே வந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரான வடவள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேர் தகாத வார்த்தைகளால் பேசினர். அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்க முற்பட்டனர். அங்கிருந்து தப்பித்து காரில் ஏறியபோது, அங்கு பணியிலிருந்த காவல்துறையினரின் லத்தியை பிடுங்கி காரை தாக்கினர். காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என்னை தாக்க வந்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வடவள்ளி சந்திரசேகர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “உள்நோக்கத்துடன் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை சீர்குலைக்கவே இவ்வாறு கார்த்திகேய சிவசேனாபதி செய்து வருகிறார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x