கடலூர் மாவட்டத்தில் -  45 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு :

கடலூர் மாவட்டத்தில் - 45 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு :

Published on

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது வழிசோதனைபாளையம், குடிதாங்கி, முழுக்குத்துறை, ஓடாக்கநல்லூர், கஞ்சநாதன்பேட்டை உட்பட 45இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இயங்கவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டது.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்குப் பதிவு தாமத மானது.

இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி அளிக்கப்பட்டு, கையுறையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in