Published : 07 Apr 2021 03:17 am

Updated : 07 Apr 2021 03:17 am

 

Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் - இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதம் :

திருச்சி

மணப்பாறை அருகே இயந்திரத்தில் பழுது காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட தேக்கமலை கோவில்பட்டியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.


இங்குள்ள 530 வாக்குகளில் 225 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் சுமார் 12 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டு சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்கிடையே, பழுதான வாக்குப்பதிவு இயந்திரத்தில் பரிசோதனைக்காக பதிவு செய்யப்பட்ட 50 வாக்குகளை அழிக்காமல் விட்டுவிட்டதாகவும், எனவே முதலில் பதிவு செய்யப்பட்ட 225 வாக்குகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் வாக்குச்சாவடி முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல, மணப்பாறை அருகேயுள்ள கோட்டை பளுவஞ்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர செயல்படாததால் குறிப்பிட்டபடி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்குத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல பல்வேறு காரணங்களால் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x