வெறிச்சோடிய சாலைகள் :

தேர்தலையொட்டி நேற்று பொதுவிடுமுறை என்பதால், திருநெல்வேலி வண்ணார்பேட்டை சாலை வெறிச்சோடிக் கிடந்தது.  									        படம்: மு.லெட்சுமி அருண்.
தேர்தலையொட்டி நேற்று பொதுவிடுமுறை என்பதால், திருநெல்வேலி வண்ணார்பேட்டை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

சட்டப் பேரவை தேர்தலைமுன்னிட்டு பொதுவிடுமுறைஅளிக்கப்பட்டிருந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறுஇடங்களிலும் வாகனங்கள் இயக்கம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடியிருந்தன. ஏராளமானகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஜவுளிகடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைவீதிகள் வெறிச்சோடின.

திருநெல்வேலியிலிருந்து மதுரை, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் குறைந்தஅளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் காணப்பட்டது. திருநெல்வேலி மாநகரிலும் குறைந்த அளவுக்கே நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in