Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

தளி தொகுதியில் பதற்றமான மலைக் கிராம வாக்குச்சாவடிகளில் பொது பார்வையாளர் ஆய்வு :

ஓசூர்: தளி சட்டப்பேரவை தொகுதியில் மலை மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 38 பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து தளி தேர்தல் பொது பார்வையாளர் ஹன்ஸ்ராஜ் சவுகான் ஆய்வு மேற்கொண்டார்.

தளி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28,625 பேரும், பெண் வாக்காளர்கள் 1,21,915 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 39 பேரும் என மொத்தம் 2,50,579 பேர் உள்ளனர். தளி தொகுதி முழுவதும் 381 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 68 வாக்குச்சாவடிகள் மலையும், வனமும் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் 39 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு வசதிகள் குறித்து பொது பார்வையாளர் ஹன்ஸ்ராஜ் சவுகான் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல தளி, ஜவளகிரி ஆகிய கிராமங்களில் மலையும் வனமும் சார்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x