Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட - 5 நட்சத்திர வேட்பாளர்களுக்கு மயிலாப்பூரில் வாக்கு :

சென்னை

தமிழகத்தில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின்,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட 5 நட்சத்திர வேட்பாளர்கள் இன்று மயிலாப்பூர் தொகுதியில் வாக்களிக்கின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அதே தொகுதியில்தான் வாக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால், பல வேட்பாளர்களும் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர். அவ்வாறு, தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் 5 நட்சத்திர வேட்பாளர்கள் மயிலாப்பூர் தொகுதியில் இன்று தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

அதன்படி கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், கோவைதெற்கு தொகுதி வேட்பாளரான மக்கள்நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்,சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதிபாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு ஆகியோரின் வாக்குகள் மயிலாப்பூரில்தான் வருகின்றன. இது மட்டுமின்றி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் வாக்குகளும் மயிலாப்பூரில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x