

சேலம் மாவட்டம் தீவட்டிப் பட்டி அடுத்த எல்லையூரில் கட்சியினர் பணம் விநியோகம் செய்வதாக நிலை கண்காணிப்புக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிலை கண்காணிப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு இருந்த பிரவீன்(28), கார்த்திக் (40) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் ரூ.4,170 இருந்தது. பணத்தை பறிமுதல் செய்ததுடன் இருவரை யும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.