Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தங்க நாணயங்கள் விநியோகம் : விசாரணை நடப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தகவல்

திருநள்ளாறு தங்க நாணயம் பறிமுதல் விவகாரத்தில் பாஜக வேட்பாள ருக்கு ஆதரவாக நடந்ததாக தகவல் கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரி வித்தார்.

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தலைமை செயலகத்தில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 10.04 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதில் பெண்கள் 5.31லட்சம். ஆண்கள் 4.72 லட்சம். மூன் றாம் பாலினத்தவர் 116 பேர் உள்ளனர். இதில் 11,915 பேர் மாற்றுத்திறனாளிகள். 80 வயதுக்கு மேல் 17,041 பேரும், புதிய வாக்காளர்கள் 31,864 பேரும்இடம்பெற்றுள்ளனர். வாக்காளர்க ளுக்கு நூறு சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது.

வாக்காளர் வசதிக்காக வாக்காளர் விபர சீட்டுகள் தரப்பட்டுள்ளன. வாக் களிக்க வரும்போது இந்த விபர சீட்டை அடையாள சான்றாக ஏற்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று எடுத்து வர வேண்டும்.

புதுச்சேரியில் உழவர்கரை, நெல் லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதனால் இங்கு 1,558 கன்ட்ரோல் யூனிட், 1,677வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்தி ரங்கள் பயன்படுத்தப்படும். ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்குகள் மட்டும் இடம்பெறும். இத்தேர்தலில் 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளோம். ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில் மகளிர் கொண்டே செயல்படும் ஒரு வாக்குச்சாவடி தொகுதி தோறும் அமைத் துள்ளோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக 6,835 பேர் நியமிக்கப்பபட்டுள்ளனர். அதில் 2,833 பெண் வாக்குச்சாவடி அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். பாதுகாப்பு பணியில் 2,420 மாநில காவல்துறையினரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1,490 ஊர்க்காவல் படையினரும் (ஆயிரம் பேர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளனர்), மத்திய ஆயுத காவல் படையினர் 40 கம்பெனியும் வந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 27, காரைக்காலில் 6, மாஹேவில் 3, ஏனாமில் 4-ம் பணியில் இருப்பார்கள்.

பதற்றமானவை

புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாஹேவில் 8, ஏனாமில் 14-ம் உள்ளன. ஏனாமில் 16 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படைபணியில் இருக்கும். கண்காணிப்புகேமராக்கள் அனைத்து வாக்குச் சாவடியிலும் பொருத்தப்படும். வலைத் தளத்துடன் இணைந்த கண்காணிப்பு செய்வோம். புதுச்சேரியில் இதுவரை ரூ.36.85 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்துள்ளோம்.

மாதிரி நன்னடத்தை விதிகள் மீறியதாக இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்றுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மின்சார இணைப்பு துண்டிக்கப்படாமல் தொடர்ந்து மின் விநியோகம் தர மின்துறையில் அறிவுறுத்தியுள்ளோம்.

தங்க நாணயங்கள் பறிமுதல்

காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை யிட்டபோது, 149 தங்க காசுகள், ரூ.90 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை கிடந்தது. பறக்கும் படையினர் அதனை கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத 2 நபர்களைதேடி வருகின்றனர். 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க நாணயங்கள் மதிப்பு ரூ.5 லட்சம். எனக்கு வந்த தகவலின்படி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தங்க நாணயங்கள் விநியோகித்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ஏனாம் சுயேச்சை வேட்பாளர் காணாமல் போனதாக வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதனால் தேர்தல் நடைமுறைக்கு ஏதும் பாதிப்பு இல்லை. தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படவில்லை. நடத்தை விதிமுறைகளை அப்படியே நடைமுறைப்படுத்துகிறோம். பாஜக எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அது கட்சி செலவுக்கணக்கில் இணைக்கப்படும். இனி அனுமதி பெறாமல் யாரும்அனுப்பக்கூடாது என்று தெரிவித் துள்ளோம்.

அதேபோல் மொபைல் நிறு வனங்களிடமும் தெரிவித்துள்ளோம். சைபர் கிரைம் போலீஸாரும் விசா ரணை நடத்துகிறார்கள் என்று தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x